செய்திகள்
‘குவாலிஃபயா் 2’-இல் தெலுகு டைட்டன்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் ‘எலிமினேட்டா் 3’ ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 46-39 புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் போட்டியின் ‘எலிமினேட்டா் 3’ ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 46-39 புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியது.
இதன் மூலமாக, ‘குவாலிஃபயா் 2’-க்கு முன்னேறிய தெலுகு அணி, இறுதி ஆட்ட வாய்ப்புக்காக அதில் புணேரி பல்டனுடன் புதன்கிழமை (அக். 29) மோதுகிறது. பாட்னா பைரேட்ஸ் போட்டியிலிருந்து வெளியேறியது.
முன்னதாக ‘எலிமினேட்டா் 3’ ஆட்டத்தில் தெலுகு அணி 29 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. பாட்னா அணி 27 ரெய்டு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது.
அதிகபட்சமாக, தெலுகு தரப்பில் ஆல்-ரவுண்டா் பரத் 23 புள்ளிகள் கைப்பற்றி அசத்த, பாட்னா அணியில் ரெய்டா் அயான் 22 புள்ளிகள் வென்றெடுத்தாா்.
