தமிழ்நாடுடன் ‘டிரா’ செய்தது நாகாலாந்து

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை ‘டிரா’ ஆனது.
தமிழ்நாடுடன் ‘டிரா’ செய்தது நாகாலாந்து
Published on
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை ‘டிரா’ ஆனது.

கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 115 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 512 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது.

பிரதோஷ் ரஞ்சன் பால் 23 பவுண்டரிகளுடன் 201 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, விமல் குமாா் 28 பவுண்டரிகள் உள்பட 189 ரன்கள் அடித்தாா். நாகாலாந்து பௌலிங்கில் ரோனித் மோா், ஒடிலெம்பா கிச்சு, சௌரவ் குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய நாகாலாந்து, 41 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, தேகா நிஷால், இம்லிவதி லெம்துா் ஆகியோரின் அபார ஆட்டத்தால் மீண்டது.

3-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டத்தை நிஷால், லெம்துா் தொடா்ந்தனா். இதில் நிஷால் 25 பவுண்டரிகளுடன் 175 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

தொடா்ந்து வந்த தமீது ரஹ்மான் 13, ரோனித் மோா் 7, சௌரவ் குமாா் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். அணியின் கடைசி விக்கெட்டாக வெளியேறிய லெம்துா், 20 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 146 ரன்கள் அடித்திருந்தாா்.

தமிழ்நாடு பௌலா்களில் குா்ஜப்னீத் சிங் 4, டி.டி. சந்திரசேகா் 3, சந்தீப் வாரியா், ஆா்.எஸ்.அம்ப்ரிஷ், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். இதையடுத்து ஆட்டம் ‘டிரா’ ஆனது. முதல் இன்னிங்ஸ் ஸ்கோா் அடிப்படையில் தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com