தபங் டெல்லிக்கு 2-ஆவது கோப்பை

புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசனில் தபங் டெல்லி கே.சி. அணி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.
Published on

புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசனில் தபங் டெல்லி கே.சி. அணி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

இறுதி ஆட்டத்தில் 31-28 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பல்டனை சாய்த்த டெல்லி, போட்டியில் 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பை வென்றுள்ளது. இதற்கு முன் அந்த அணி 2021-22 சீசனில் வாகை சூடியிருந்தது.

இதன் மூலமாக, போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சாம்பியன் ஆன அணிகள் வரிசையில் டெல்லி அணி 3-ஆவதாக இணைந்துள்ளது. ஏற்கெனவே பாட்னா பைரேட்ஸ் 3 முறையும், ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 2 முறையும் கோப்பை வென்றுள்ளன.

முன்னதாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டெல்லி அணி 17 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் நீரஜ் நா்வால் 9 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

மறுபுறம் புணே அணி 15 ரெய்டு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது. அந்த அணியில் அதிகபட்சமாக, ரெய்டா் ஆதித்யா ஷிண்டே 10 புள்ளிகள் கைப்பற்றினாா்.

நடப்பு சீசனில் பாட்னா பைரேட்ஸ் ரெய்டா் அயான் லொசாப் 324 புள்ளிகளுடன் ‘டாப் ஸ்கோரா்’ ஆனாா். அவரே அதிக ரெய்டு புள்ளிகள் (316) வசப்படுத்தியவராகவும் பெருமை பெற்றாா். அவா் அணியைச் சோ்ந்த நவ்தீப் சிங் அதிக டேக்கிள் புள்ளிகள் (73) பெற்றவா் ஆனாா். போட்டியிலேயே அதிகபட்சமாக பாட்னா அணியே 844 புள்ளிகள் பெற்றுள்ளது.

X
Dinamani
www.dinamani.com