
லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி வீரர்களும் சியாட்டல் சவுண்டர்ஸ் அணியினரும் மோதலில் ஈடுபட்டனர்.
இதன் உச்சக்கட்டமாக இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸ் எதிரணி பயிற்சியாளர் மீது எச்சிலைத் துப்பியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் நடைபெற்ற லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் சியாட்டல் சவுண்டர்ஸ் அணி 3-0 என இன்டர் மியாமியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் லூயிஸ் சௌரஸ் 2 அசிஸ்ட்களை செய்தார். ஆனால், அவை கோல் ஆக மாறாதது துரதிஷ்டவசமானது.
ஸ்டாப்பேஜ் நேரத்துக்குப் பிறகு இரு அணியின் வீரர்களும் மோதலில் ஈடுபட்டார்கள்.
உருகுவே நாட்டைச் சேர்ந்த இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸ் எதிரணியின் பயிற்சியாளர் ஒருவர் மீது எச்சிலைத் துப்பியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
சௌரஸ் அநாகரிகமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல...
லூயிஸ் சௌரஸ் இந்தமாதிரி நடந்துக்கொள்வது முதல்முறையல்ல. ஏற்கெனவே, 2010 உலகக் கோப்பை காலிறுதியில் கானா அணியுடனான போட்டியில் வேண்டுமென்றே ஹேண்ட் பால் செய்தார்.
அதே ஆண்டு, பிஎஸ்வி அணியினர் ஒருவரை சௌரஸ் கடித்துவிட்டார். 2013 ஆம் ஆண்டு லிவர்பூல் அணிக்காக விளையாடும்போது செல்ஸி வீரரையும் கடித்தார். அதனால், 10 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டார்.
கடைசியாக 2014 உலகக் கோப்பையிலும் இத்தாலியின் டிஃபென்டர் ஒருவரையும் கடித்தார்.
லீக்ஸ் கோப்பையில் நடந்ததிற்கும் விரைவில் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.