லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டி: மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி தோல்வி!

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற சியாட்டல் அணி குறித்து...
Inter Miami forward Lionel Messi looks on after losing a Leagues Cup final soccer match against the Seattle Sounders,
ரன்னர் அப் விருதுடன் இண்டர் மியாமி அணி வீரர்கள். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணியை சியாட்டல் சௌன்டர்ஸ் அணி வீழ்த்தியது.

மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 0-3 என மோசமாக தோல்வியுற்றது.

அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்ற லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் சியாட்டல் சவுண்டர்ஸ் அணி 3-0 என அபார வெற்றி பெற்றது.

போட்டியில் 26ஆவது நிமிஷத்தில் சியாட்டல் அணியின் ரொசாரியோ கோல் அடித்தார்.

அடுத்து இரண்டாம் பாதியில் சியாட்டல் அணியினர் 84-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் ஒரு கோல், 89-ஆவது நிமிஷத்தில் மற்றும் ஒரு கோல் அடித்து 3-0 என அசத்தினர்.

Seattle Sounders players celebrate after the Leagues Cup final soccer match
கோப்பையுடன் சியாட்டல் அணியினர். படம்: ஏபி

இன்டர் மியாமி அணி 3 கோல்கள் அடிக்கும் வாய்ப்பு வந்தும் அதை இலக்கை நோக்கி அடிக்காமல் தவறவிட்டனர். 2023-இல் கோப்பையை வென்ற இன்டர் மியாமி இந்தமுறை அதை தவறவிட்டது.

Summary

Osaze De Rosario scored in the 26th minute, and the Seattle Sounders blanked Lionel Messi and Inter Miami 3-0 on Sunday night to win the Leagues Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com