
மான்செஸ்டர் சிட்டி அணியில் பிஎஸ்ஜியின் கோல்கீப்பர் கியான்லூய்கி டோனாரும்மா இணைந்துள்ளார்.
மான்செஸ்டர் சிட்டி அணியில் இவர் 2030 வரை விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்த கியான்லூய்கி டோனாரும்மா (26 வயது) பிஎஸ்ஜியின் வெற்றிக்கு மிகுந்த பங்களிப்பை செய்தவராக இருக்கிறார்.
முதல்முறையாக சாம்பியன் லீக்கை பிஎஸ்ஜி அணி கடந்தமுறை வெல்ல இவர் பெரிதும் உதவினார்.
ஏசி மிலன் அணியில் 16 வயதில் இணைந்த டோனாரும்மா 250க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 206-இல் இத்தாலியன் சூப்பர் கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
ஐரோப்பாவிலிருந்து 2021-இல் பிரான்ஸுக்கு வந்து, பிஎஸ்ஜி அணியில் இணைந்து, 4 சீசனில் பல கோப்பைகளை வென்றுள்ளார்.
6 அடி 5 அங்குலம் இருக்கும் இவர் கடந்த சீசனில் 17, மொத்தமாக 159 க்ளீன் ஷீட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.