
யுஎஸ் ஓபனில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
தனது டென்னிஸ் வாழ்க்கையில் பாம்ப்ரி முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் பாம்ப்ரி - வீனஸ் காலிறுதியில் வென்று அசத்தியுள்ளார்கள்.
இந்தியாவின் யூகி பாம்ப்ரியும் நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸும் காலிறுதியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம், குரேஷியாவின் நிகோலா மெக்டிக்கும் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் பாம்ப்ரி - வீனஸ் இணையினர் 6-3, 6-7(8), 6-3 என்ற செட்களில் வென்று அசத்தினார்கள்.
ஜுனியர் ஆஸி. ஓபனில் 2009இல் சாம்பியன் பட்டம் வென்ற பாம்ப்ரி சீனியர் போட்டிகளில் தற்போதுதான் தனது உச்சத்தை அடைந்துள்ளார்.
அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் ஆறாவது இடத்தில் ஜோ சாலிஸ்பரி - நீல் ஸ்குப்ஸ்கி இணையுடன் மோதவிருக்கிறார்கள்.
ஏற்கெனவே, இந்தியாவில் இருந்து இரட்டையர் பிரிவில் பல கிராண்ட்ஸ்லாம் பதக்கங்கள் கிடைத்துள்ளன. தற்போது, அதில் மற்றுமொரு மகுடத்தை பாம்ப்ரி சேர்ப்பாரா என்ற ஆர்வம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.