அரையிறுதிக்கு முன்னேறிய சின்னர்..! கடின தரை போட்டிகளில் புதிய சாதனை!

யானிக் சின்னர் நிகழ்த்திய சாதனைகள் குறித்து...
Jannik Sinner, of Italy, reacts after defeating Lorenzo Musetti, of Italy, during the quarterfinal round of the U.S. Open tennis
யுஎஸ் ஓபனில் யானிக் சின்னர்... படம்: ஏபி
Published on
Updated on
1 min read

டென்னிஸ் தரவரிசையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர் யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் லொரன்ஸோ முசெட்டியை வீழ்த்தி அரியிறுதிக்கு முன்னேறினார்.

சாதனை வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் ஆடவர் காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் நட்சத்திர வீரரும் நம்.1 டென்னிஸ் வீரருமான யானிக் சின்னரும் மற்றுமொரு இத்தாலி நாட்டின் முசெட்டியும் மோதினார்கள்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் சின்னர் 6-1, 6-4, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தினார்.

முதல் செர்வில் சின்னர் 91 வெற்றி சதவிகிதமும் இரண்டாவது செர்வில் 52 வெற்றி சதவிகிதத்தையும் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சின்னர் தொடர்ச்சியாக ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சாதனைகள் விவரம்

அரையிறுதியிலும் வென்றால் இந்தாண்டின் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

யானிக் சின்னர் தொடர்ச்சியாக 26 கடின தரை மேஜர் போட்டிகளில் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் நோவக் ஜோகோவிச்சை சமன்படுத்தியுள்ளார்.

கடின தரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகள்

  • ரோஜர் பெடரர் : 40 ( 2005 முதல் 2008)

  • நோவக் ஜோகோவிச் : 27 (2011 முதல் 2012)

  • யானிக் சின்னர் : 26 ( நடப்பு 2025 சீசனில்)

  • நோவக் ஜோகோவிச் :  26 (2015 முதல் 2016)

  • இவான் லெண்டில்: 26 (1985 முதல் 1988)

  • ஜான் மெக்கென்ரோர்: 25 (1979 முதல் 1982)

16-0

யானிக் சின்னர் தனது சக இத்தாலி நாட்டு வீரர்களுடன் 16 போட்டிகளிலும் வென்று 16-0 எனவும் முசெட்டியுடன் 3 போட்டிகளிலும் வென்று (3-0) அசத்தலான சாதனையை தொடர்ந்து வருகிறார்.

முதல்முறை...

ரஃபேல் நடாலுக்குப் பிறகு சின்னர் இளம் வயதில் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இது சின்னருக்கு முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Yannick Cinner, the world number one in tennis rankings, advanced to the semifinals at the US Open.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com