
உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் தனது முதல் போட்டியில் களமிறங்கும் ஸ்பெயின் அணி நாளை தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.
இளம் ஸ்பெயின் அணியின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
2026ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன.
ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி குரூப் இ பிரிவில் இருக்கின்றன. அதில் புல்கேரியாவுடன் முதல் போட்டியில் நாளை (இந்திய நேரப்படி இரவு 12.30) மோதுகிறது.
அதிகமான இளம் அணியினரைக் கொண்டுள்ள ஸ்பெயின் அணியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
குறிப்பாக லாமின் யமால், பெட்ரி, காயத்திலிருந்து மீண்டு வந்த ரோட்ரியின் ஆட்டத்தைக் காணவும், இளம் அணி வெற்றியுடன் தொடங்குமா எனவும் பார்க்க உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.