
யுஎஸ் ஓபன் ஒற்றையர் மகளிருக்கான அரையிறுதியில் சபலென்கா, அனிசிமோவா வென்றுள்ளார்கள்.
நடப்பு சாம்பியனான சபலென்காவை, அனிசிமோவா இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
பெலாரஸின் அரினா சபலென்கா அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவை 4-6, 6-3, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினார்.
மற்றுமொரு அரையிறுதியில் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, ஜப்பானின் நவோமி ஒசாகவை 6-7 (4), 7-6 (3), 6-3 என்ற செட்களில் வீழ்த்தினார்.
இதன்மூலம் நடப்பு சாம்பியனான சபலென்காவை வரும் செப்.7ஆம் தேதி அனிசிமோவா இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.
சபலென்காவுக்கு சவால்!
டென்னிஸ் தரவரிசையில் சபலென்கா முதலிடத்திலும் அனிசிமோவா ஒன்பதாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் ஒன்பது முறை மோதிக்கொள்ள, அன்சிமோவா 6 முறையும் சபலென்கா 3 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருக்கும் சபலென்காவுக்கு இந்தமுறை கோப்பையை தக்கவைப்பது கடினமான சவாலாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.