
சொந்த மண்ணில் கடைசி போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக 2 கோல்கள் அடித்தார்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் கடைசிக்கு முந்தையை ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 3-0 என வென்றது.
மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் வெனிசுலா உடன் மோதின.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 39, 80-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
சொந்த மண்ணில் இது மெஸ்ஸியின் கடைசி போட்டியாக இருக்கும் என்பதால் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது மெஸ்ஸி கண்ணீருடன் இருந்தார்.
இறுதியில் 3-0 என வென்றதும் அனைத்து ரசிகர்களும் மெஸ்ஸிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.
இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா 77 சதவிகித பந்தினை தன் வசம் வைத்திருந்தார்கள்.
புள்ளிப் பட்டியலில் 38 புள்ளிகளுடன் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு முதலிடத்தில் இருக்கிறது.
முதல்முறையாக உலகக் கோப்பைக்குத் தேர்வாக முயற்சிக்கும் வெனிசுலா 18 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் இருக்கிறது.
டாப் 6 அணிகள் மட்டுமே உலகக் கோப்பைக்குத் தேர்வாகும். இதன் கடைசி போட்டியில் கொலம்பியா அணியுடன் செப்.10ஆம் தேதி மோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.