
யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் கார்லோஸ் அல்கராஸ் நேர் செட்களில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
அல்கராஸ் தனது ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நோக்கி முன்னோக்கி செல்கிறார்.
பழிதீர்த்த அல்கராஸ்
அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்கராஸும் மோதினார்கள்.
2 மணி நேரம் 25 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 22 வயதான அல்கராஸ் 6-4, 7-6(4), 6-2 என நேர் செட்களில் 38 வயதான ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
இதன்மூலம் தனது ஏழாவது மேஜர் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இருவரும் ஒன்பாதவது முறை மோத நான்காவது முறையாக அல்கராஸ் வென்றார். இருப்பினும் ஜோகோவிச் ஐந்து முறை வென்று முதலிடத்தில் இருக்கிறார்.
அல்கராஸ் நிகழ்த்திய புதிய சாதனை
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒரு செட் கூட இழக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் உலக அளவில் ஐந்தாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக பிஜோர்ன் போர்க், ரஃபேல் நடால், மேட்ஸ் விலாண்டர் மற்றும் ஜிம் கூரியர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.
குறைந்த வயதில் 7 இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை
அல்கராஸ் தனது 23 வயதுக்கு முன்பாக 7 இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பாக பிஜோர்ன் போர்க், ரஃபேல் நடால் தலா 8 முறை முன்னேறியுள்ளார்கள்.
அல்கராஸுக்கு மே 5, 2026-இல் 23 வயதாகும். அவர் அடுத்தாண்டு ஆஸி. ஓபனில் இறுதிக்குச் சென்றால் 23 வயதிற்குள்ளாக 8-ஆவது முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள பிஜோர்ன் போர்க், ரஃபேல் நடாலுடன் சாதனையை சமன்செய்ய முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.