இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?

யுஎஸ் ஓபன் அரையிறுதில் வென்ற சின்னர் குறித்து...
Jannik Sinner, of Italy, reacts after defeating Felix Auger-Aliassime, of Canada, semifinals of the U.S. Open tennis championships
வெற்றிக் களிப்பில் யானிக் சின்னர். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதில் யானிக் சின்னர் வென்று இறுதிப் போட்டிக்குத் தேர்வானார்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் சின்னர் மோதவிருக்கிறார்.

இறுதிப் போட்டியில் அல்கராஸ் - சின்னர்

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபனில் அரையிறுதியில் இத்தாலியின் யானிக் சின்னரும் கனடாவைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிமும் மோதினார்கள்.

3 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சின்னர் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்றார்.

இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸுடன் சின்னர் மோதவிருக்கிறார்.

இருவரும் இதுவரை 14 முறை மோதிக்கொண்டதில் சின்னர் 5 முறையும் அல்கராஸ் 9 முறையும் வென்றுள்ளார்.

சாதனை படைப்பாரா சின்னர்?

தொடர்ச்சியாக ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு சின்னருக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பாக ரோஜர் பெடரர் 2004- 2008 வரை தொடர்ச்சியாக 5 கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தை வென்றுள்ளார்.

27-0

யானிக் சின்னர் ஹார்டு கோர்ட் எனப்படும் கடின தரை போட்டிகளில் 27 -0 என அசத்தலாக வென்றுள்ளார். மேலும், 34 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 33-இல் வென்று ஆதிக்கத்துடன் இருக்கிறார்.

Jannik Sinner took a medical timeout because of a bothersome abdominal muscle during a mid-match lull before retaking control for a 6-1, 3-6, 6-3, 6-4 victory over Felix Auger-Aliassime in the U.S.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com