நெய்மருக்கு ரூ.8,800 கோடி சொத்து! அடையாளம் தெரியாத பில்லியனரின் உயில்!

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு 752 மில்லியன் பவுண்டு சொத்துகளை எழுதிவைத்த அடையாளம் தெரியாத பில்லியனர்
நெய்மர்
நெய்மர்X| Neymar Jr
Published on
Updated on
1 min read

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு அடையாளம் தெரியாத பில்லியனர் ஒருவர் 752 மில்லியன் பவுண்டு மதிப்புடைய சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததாகக் கூறப்படும் பில்லியனர் ஒருவர், நெய்மர் மீதான ஈர்ப்பின் காரணமாகவும், தனது பெற்றோருடன் நெய்மரின் பிணைப்பின் காரணமாகவும் இந்த உயிலை எழுதுவதாகத் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பில்லியனரின் அடையாளங்கள் குறித்து அரசு எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.

இந்த உயிலின்படி, நெய்மருக்கு சொத்துகள் மாற்றப்பட்டால், அது வரிகள் உட்படுவது மட்டுமின்றி, சில சட்ட விதிமுறைகளுக்கும் உட்படுத்தப்படும்.

இருப்பினும், பெரிய நிறுவனங்களில் முதலீடு மற்றும் பங்குகள் அடங்கிய சொத்துகள் நெய்மருக்கு எழுதி வைக்கப்பட்ட விவகாரம் குறித்து நெய்மர் இதுவரையில் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

Summary

Neymar Named Sole Heir To Estate Worth £752M By Anonymous Billionaire In Brazil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com