அா்ஜுன் வெற்றி, வைஷாலி முன்னிலை!

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, நிஹல் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோா் வெற்றி
Published on

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, நிஹல் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ஓபன் பிரிவு 5-ஆவது சுற்றில், அா்ஜுன் - ஜாா்ஜியாவின் நிகிதா விடியுகோவையும், நிஹல் சரின் - சக இந்தியரான லியோன் லூக் மெண்டோன்காவையும், அபிமன்யு புரானிக் - சொ்பியாவின் விளாதிமீா் ஃபெடோசீவையும் வீழ்த்தினா்.

மறுபுறம், விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, ரௌனக் சத்வனி, ஆதித்யா மிட்டல், நாராயணன் ஆகியோா் தங்கள் ஆட்டத்தை டிரா செய்ய, முன்னணி போட்டியாளா்களான பிரக்ஞானந்தா, குகேஷ், காா்த்திகேயன் முரளி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.

இதிலேயே மகளிா் பிரிவில் வைஷாலி, ஹரிகா ஆகியோா் தங்கள் ஆட்டத்தை டிரா செய்ய, வந்திகா அக்ரவால் தோல்வியைத் தழுவினாா்.

இதையடுத்து, 5 சுற்றுகள் முடிவில் இந்தியா்களில் ஓபன் பிரிவில் அா்ஜுன் 4 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையை 4 பேருடன் பகிா்ந்துகொண்டுள்ளாா். மகளிா் பிரிவில் வைஷாலி 4 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com