ஜாஸ்மின் லம்போரியா
செய்திகள்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: காலிறுதியில் ஜாஸ்மின்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளாா்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளாா்.
உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் அபாரமாக செயல்பட்டு 3 சுற்றுகளிலும் ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேஸிலின் ஜூஸ்லின் ரோமியுவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
ஆடவா் இரண்டாவது சுற்றில் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அபினாஷ் ஜாம்வால் 5-0 என மெக்ஸிகோவின் ஹியுகோ பேர்ரனை வீழ்த்தினாா்.
மகளிா் 54 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்ஷி 0-5 என துருக்கியின் ஹாட்டிஸிடம் வீழ்ந்தாா். சனமச்சா சானுவும் 0-5 என கஜகஸ்தானின் நடாலியாவிடம் தோற்றாா்.
அபினாஷ் ஜாம்வால்