
இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜமில் தலைமையில் புதிய சாதனைகள் நிகழ்ந்து வருகின்றன.
காஃபா நேஷன்ஸ் தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.
இந்திய கால்பந்து அணிக்கு 2005-க்குப் பிறகு கடந்த ஆகஸ்டில் முழுநேர பயிற்சியாளராக காலித் ஜமில் நியமிக்கப்பட்டார்.
காஃபா (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பைக்கான 35 பேர்கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ததிலேயே இவர் தனது அதிரடியான முடிவுகளுக்குப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கான இந்தியா - ஓமன் அணிகள் மோதிய ஆட்டம் முதலில் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
வெற்றியாளரைத் தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு ஃபிஃபா உலகக் கோப்பை தனது வாழ்த்துகளை இந்திய அணிக்குத் தெரிவித்துள்ளது.
காலித் ஜமில் தலைமையில் முதல் தொடரிலேயே இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இந்தத் தொடரில் முதல் போட்டியில் தஜிகிஸ்தானை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தி சாதனை படைத்தது.
நேற்றைய போட்டியில் ஓமனை இந்திய அணி முதல்முறையாக வென்று மற்றுமொரு வரலாறு படைத்தது.
அடுத்ததாக 2027 ஆம் ஆண்டுக்கான ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
அடுத்த மாதம் அக்.9, அக்.11-இல் சிங்கப்பூருடன் இந்திய அணி மோதவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.