
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்து மிரட்டியுள்ளார்.
நார்வே அணி மால்டோவை 11-1 என்ற கோல்கள் கணக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள்
தனது சொந்த நாட்டில் உல்லேவால் திடலில் மால்டோவுக்கு எதிரான போட்டியில் நார்வே அணி 11 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது.
வீரர்களுக்கான பேருந்து கதவில் இடித்துக்கொண்ட எர்லிங் ஹாலண்ட் போட்டியில் மறக்க முடியாத தனது கால்தடத்தைப் பதிந்துள்ளார்.
இந்தப் போட்டியில் 11, 36, 43, 52, 83-ஆவது நிமிஷங்களில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து அசத்த, அதே அணியின் தீலோ ஆஸ்கார்ட் 67, 76, 79 (பெனால்டி), 90+1-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் எர்லிங் ஹாலண்ட் வருங்கால கால்பந்தின் புதிய ஜாம்பவனாக மாறும் எல்லா தகுதிகளும் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
நார்வே வரலாற்று வெற்றி
இதன்மூலம் நார்வே அணி ஐரோப்பிய உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்பாக 1969ஆம் ஆண்டு சைப்ரஸ் அணிக்கு எதிராக வெஸ்ட் ஜெர்மனி 12-0 என வென்றிருந்தது.
நார்வே அணியின் சர்வதேச போட்டிகளில் இந்தப் போட்டி மிகப்பெரிய வெற்றியாக முதலிடம் பிடித்துள்ளது.
குரூப் ஐ பிரிவில் நார்வே அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
மோசமாக விளையாடும் மால்டோவா
மால்டோவா அணி ஃபிஃபா தரவரிசையில் 154-ஆவது இடத்தில் இருக்க, நார்வே அணி 33-ஆவது இடத்தில் இருக்கிறது.
மால்டோவா அணி கடந்த ஐந்து போட்டிகளிலும் தோல்வியுற்று 25 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.
இருந்தும் மால்டோவா அணி உலகக் கோப்பைக்குத் தகுதிபெற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் நேஷன்ஸ் லீக் குரூப்பில் வென்றதால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிபெற வாய்ப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.