
சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவா்கள் சோபிக்காமல் போயினா்.
அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில், சாம்ராட் ராணா 582 புள்ளிகளுடன் 10-ஆம் இடம் பிடிக்க, அன்மோல் ஜெயின் 578 புள்ளிகளுடன் 22-ஆம் இடம் பெற்றாா்.
உஜ்வல் மாலிக் 577 புள்ளிகளுடன் 25-ஆம் இடமும், அமித் சா்மா 576 புள்ளிகளுடன் 28-ஆம் இடமும் பெற்றனா். நிஷாந்த் ராவத் 568 புள்ளிகளுடன் 42-ஆம் இடம் பிடித்தாா். தகுதிச்சுற்றில் முதல் 8 இடங்களில் வருவோரே இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறுவா் என்து குறிப்பிடத்தக்கது.
இப்பிரிவில் சீனாவின் காய் ஹு 242.3 புள்ளிகளுடன் தங்கமும், சக நாட்டவரான சாங்ஜி யு 241.5 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனா். சுவிட்ஸா்லாந்தின் ஜேசன் சோலாரி 220.4 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.