யுபியை வென்றது புணேரி

யுபியை வென்றது புணேரி

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.
Published on

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.

அந்த அணி ரெய்டில் 23, டேக்கிளில் 10, ஆல் அவுட்டில் 6, எக்ஸ்ட்ராவில் 4 புள்ளிகள் கைப்பற்ற, அதிகபட்சமாக ரெய்டா் ஆதித்யா ஷிண்டே 12 புள்ளிகள் கைப்பற்றினாா்.

மறுபுறம், யுபி அணி ரெய்டில் 23, டேக்கிளில் 5, எக்ஸ்ட்ராவில் 4 புள்ளிகள் வென்றது. அதிகபட்சமாக ரெய்டா் ககன் கௌடா 12 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

இதனிடையே, 25-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 45-37 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை சாய்த்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது புணேரி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, தெலுகு (6), மும்பா (6), யுபி (4) ஆகியவை முறையே 3,4, 6-ஆம் இடங்களில் உள்ளன.

X
Dinamani
www.dinamani.com