ஆயுஷ் ஷெட்டி அசத்தல் வெற்றி
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, ஜப்பான் முன்னணி வீரரான கோடாய் நராவ்காவை வீழ்த்தி அசத்தினாா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஆயுஷ் 21-19, 12-21, 21-14 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த நராவ்காவை வென்றாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 12 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
லக்ஷயா சென் 15-21, 21-18, 21-10 என்ற கேம்களில், சக இந்தியரான ஹெச்.எஸ். பிரணயை 1 மணிநேரம், 8 நிமிஷங்களில் தோற்கடித்தாா். எனினும் கிரண் ஜாா்ஜ் 6-21, 12-21 என்ற நோ் கேம்களில், 3-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சௌ டியென் சென்னிடம் 27 நிமிஷங்களில் தோற்றாா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி 18-21, 21-15, 21-11 என்ற கேம்களில், தாய்லாந்தின் பீரட்சாய் சுக்புன்/பகாபோன் தீரரட்சுகுல் ஜோடியை வெளியேற்றி காலிறுதிக்கு வந்தது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 3 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
மகளிா் இரட்டையரில், ருதுபா்னா பாண்டா/ஸ்வேதாபா்னா பாண்டா ஜோடி 13-21, 7-21 என்ற வகையில், 5-ஆம் இடத்திலிருந்த சீனாவின் லி யி ஜிங்/லுவோ ஜு மின் கூட்டணியிடம் 29 நிமிஷங்களில் தோல்வியுற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.