
ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இதுவரை 18 அணிகள் தேர்வாகியுள்ளன. நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா தென் அமெரிக்க பிரிவில் முதல் அணியாகத் தேர்வாகி அசத்தியது.
ஆசிய கண்டத்தில் இருக்கும் இந்திய அணி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸி 2026 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகம் என அவர் தனது சொந்த மண்ணில் விளையாடியதற்குப் பிறகு பேசினார்.
அடுத்தாண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோவிலும் நடைபெற இருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளில் மொராக்கோ, துனிசியா அணிகள் தேர்வாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை எந்த அணிகளும் தேர்வாகவில்லை. இங்கிலாந்து, நார்வே அணிகள் அந்தந்த குரூப்புகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிதான் 48 அணிகளின் விவரமும் தெரியவரும்.
ஆசியா: ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான்.
தென் அமெரிக்கா: ஆர்ஜென்டீனா, பிரேசில், ஈக்குவாடர், உருகுவே, பராகுவே, கொலம்பியா.
ஆப்பிரிக்கா: மொராக்கோ, துனிசியா.
ஐரோப்பா: 54 நாடுகள் போட்டியில் இந்தப் பிரிவில் இருந்து இதுவரை ஒரு அணியும் தேர்வாகவில்லை. நவ.18-இல் 16 அணிகளின் நிலை தெரியவரும்.
வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபியன்: கனடா, மெக்சிகோ, அமெரிக்கா. (உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் அணிகள் என்பதால் இவைகள் நேரடியாகத் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.)
ஓசியானியா: 11 அணிகள் போட்டியிட்டதில் நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.