
புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி 46 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறியுள்ளது.
புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறைக்கூட கோப்பை வென்றதில்லை என்பதால் இந்தமுறை மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது.
முதல் போட்டியில் வென்ற தமிழ் தலைவாஸ் அடுத்த 2 போட்டிகளில் தோற்றது. கருத்து வேறுபாடு காரணமாக புதிய கேப்டன் பவன் செராவத் அணியிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதிய தமிழ் தலைவாஸ் 46-36 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.
ரெய்டு மூலம் 25 புள்ளிகள், டேக்கிள் மூலம் 15 புள்ளிகள், ஆல் அவுட் மூலம் 4 புள்ளிகள், எக்ஸ்ட்ரா 2 புள்ளிகள் என மொத்தம் 46 புள்ளிகள் பெற்று அசத்தியது.
இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறி 6ஆவது இடம் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.