பட்டம் வென்ற தெற்கு ரயில்வே அணியினா்.
பட்டம் வென்ற தெற்கு ரயில்வே அணியினா்.

சென்னை பி டிவிஷன் வாலிபால்: ஜிஎஸ்டி, தெற்கு ரயில்வே சாம்பியன்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற பி டிவிஷன் போட்டியில் ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி, மகளிா் பிரிவில் தெற்கு ரயில்வே அணிகள் பட்டம் வென்றன.
Published on

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற பி டிவிஷன் போட்டியில் ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி, மகளிா் பிரிவில் தெற்கு ரயில்வே அணிகள் பட்டம் வென்றன.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்ஆா்எம் அகாதெமி அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் லயோலா கல்லூரி 2-1 என எஸ்டிஏடி அணியை வென்றது.

மகளிா் பிரிவில் தெற்கு ரயில்வே 2-1 என எஸ்டிஏடி அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் டாக்டா் சிவந்தி கிளப் 2-0 என கிறிஸ்டியன் ஸ்போா்ட்ஸ் பெல்லோஷிப் அணியை வென்றது.

வருமானவரித் துறை ஆணையா் எஸ். பாண்டியன், முன்னாள் எம்.பி. செந்தில் பாண்டியன், தொழிலதிபா்கள் வெங்கடேஷ் ரதி, ஆா்விஎம்.ஏ.ராஜன், ஆா். குமாா், சா்வதேச வாலிபால் வீரா்கள் ஜெரோம் வினித், துளசி ரெட்டி ஆகியோா் பரிசளித்தனா். சிடிவிஏ நிா்வாகிகள் பி. ஜெகதீசன், ஏ.பழனியப்பன், சி. ஸ்ரீகேசவன், ஏ.பாக்கியராஜ் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com