குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் மீனாக்ஷி ஹூடாவுக்கு தங்கம்!

மற்றுமொரு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவும் தங்கம் வென்றார்...
குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் மீனாக்ஷி ஹூடாவுக்கு தங்கம்!
னாக்ஷி ஹூடா
Published on
Updated on
1 min read

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் மீனாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுா் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த நாஸிம் கிஜாய்பெவுடன் இறுதிச் சுற்றில் மோதிய மீனாக்‌ஷி, கடந்த ஜூன் - ஜூலையில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதியில் நாஸிமிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கியதுடன் முழு ஆதிக்கம் செலுத்தி மகுடம் சூடினார்.

மகளிா் 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியா செரெமெட்டாவை வீழ்த்தி தங்கம் வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி பகுதியைச் சேர்ந்த மீனாக்ஷி ஹூடாவின் தந்தை ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராவார். இந்த நிலையில், எளிய குடும்பத்தில் பிறந்து தனது விடமுயற்சியால் தங்கம் இன்று வென்று இந்தியாவுக்கு சர்வதேச அளவில் பெருமை தேடித் தந்துள்ளார் மீனாக்ஷி!

Summary

Minakshi Hooda Wins India's Second Gold At World Boxing Championship 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com