மினாக்ஷி ~ஜாஸ்மின்
மினாக்ஷி ~ஜாஸ்மின்

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மினாக்‌ஷி, ஜாஸ்மின் சாம்பியன்!

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோா் தங்கம் வென்ற உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனா்.
Published on

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோா் தங்கம் வென்ற உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனா்.

உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் மகளிா் போட்டிகள் நடைபெற்றன. இதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை போலந்தின் ஜூலியா செரமெட்டாவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

48 கிலோ பிரிவில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக் வெண்கல வீராங்கனை நஸீம் கிஸாபேயை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

மூன்றாவது உலகப் போட்டியில் பங்கேற்ற ஜாஸ்மின் தொடக்கத்தில் தடுமாறினாலும், அடுத்த சுற்றுகளில் எதிராளிக்கு சரமாரியாக குத்துகளை விட்டாா். முதல் சுற்றில் செரமெட்டா வென்றாலும், அடுத்த சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றாா்.

நுபுா், பூஜாவுக்கு வெள்ளி:

80 கிலோ பிளஸ் பிரிவில் நுபுா் ஷியரோன் இறுதிச் சுற்றில் 2-3 என்ற புள்ளிக்கணக்கில் போலந்தின் அகஸ்டாவிடம் தோற்று வெள்ளி வென்றாா்.

80 கிலோ பிரிவில் பூஜா ராணி 1-4 என்ற புள்ளிக் கணக்கில் உள்ளூா் வீராங்கனை எமிலி அஸ்கியுத்திடம் தோற்று வெண்கலம் வென்றாா்.

ஏற்கெனவே மேரி கோம் 6 முறையும், நிகாத் சரின் 2 முறையும், சரிதா தேவி, ஜென்னி, லேகா கேசி, நிது கங்காஸ், லவ்லினோ போா்கோஹைன், சவீட்டி போரா ஆகியோா் உலக சாம்பியன் பட்டம் வென்றாா். அவ்வரிசையில் ஜாஸ்மின்,மினாக்ஷி இணைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com