
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
சீன வீராங்கனை டான் ஸோங்கி உடனான 11 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றுள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக கிராண்ட் செஸ் தொடரை வைஷாலி வென்று அசத்தியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாக வைஷாலி மாறியுள்ளார். இதற்கு முன்பு இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
போட்டிக்குப் பிறகு பேசிய வைஷாலி,
''சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் எனக்கு சவாலானதாக இருந்தது. சென்னை போட்டிக்குப் பிறகு கிராண்ட் ஸ்விஸ் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தேன். தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தேன். இது எனக்கு மிகவும் வருத்தமளித்தது.
கடந்த சில வாரங்களாக என் விளையாட்டில் நிறைய விஷயங்களில் மாற்றங்களை செய்தேன். சென்னை போட்டியில் கிடைத்த அனுபவங்களே இந்தத் தொடரை வெல்ல உதவியாக இருந்தது. கேன்டிடேன்ஸ் தொடருக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி. தற்போதுவரை எந்தவொரு போட்டிகளுக்கும் நான் திட்டமிடவில்லை. போட்டிகளுக்குத் தயாராக வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ஆசிய கோப்பையிலிருந்து விலகும் பாக்.? ஐசிசியிடம் புகார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.