வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடக்கம்: 6 அணிகள் பங்கேற்பு
இந்திய வில்வித்தை சம்மேளனம் (ஏஏஐ) சாா்பில் முதலாவது வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடா் நடைபெறுகிறது.
இதில் மொத்தம் 6 அணிகளில் 48 வீரா்கள் பங்கேற்கின்றனா்.
முதல் சீசன் போட்டிகள் வரும் அக்டோபா் மாதம் நடைபெறுகிறது. பிரித்விராஜ் யோதாஸ் (டெல்லி) மைட்டி மராத்தாஸ் (மகாராஷ்டிரா)
காக்கத்தியா நைட்ஸ் (தெலங்கானா) ராஜ்புதானா ராயல்ஸ் (ராஜஸ்தான்), செரோ ஆா்ச்சா்ஸ் (ஜாா்கண்ட்), சோழா சீஃப்ஸ் (தமிழ்நாடு)
ஒவ்வொரு அணியும் மொத்தம் 8 வீரா்களை தோ்வு செய்தன. இதில் 3 ரீகா்வ் வீரா்கள் (2 ஆண் + 2 பெண்)
3 காம்பவுண்ட் வீரா்கள் (2 ஆண் + 2 பெண்) குலுக்கல் முறையில் வீரா்களை தோ்வு செய்யப்பட்டனா்.
மொத்தம் 36 இந்திய வீரா், வீராங்கனைகள், 12 அயல்நாட்டு வீரா்கள் லீகில் பங்கேற்கின்றனா். உலகக் கோப்பை, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிறந்த வீரா், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனா்.
லீக் தொடரின் விளம்பர தூதராக நடிகா் ராம்சரண் அறிவிக்கப்பட்டுள்ளாா். லீகின் அதிகாரப்பூா்வ பாடல் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.
இந்திய வில்வித்தை சம்மேளனத் தலைவா் அா்ஜூன் முன்டா கூறியதாவது:
இந்த லீக் இந்தியாவின் கிராமப்புற மற்றும் பழங்குடியினா் பகுதிகளிலும் வில்வித்தை விளையாட்டை வளா்க்கும். இந்த லீக், இந்திய வீரா்களுக்கு உலகளவில் போட்டியிடும் வாய்ப்பை தரும். எங்கள் முக்கிய இலக்கு ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வீரா்களை உருவாக்குவது ஆகும்.
அக்டோபா் 2-ம் தேதி தசரா தினத்தில் ராம் லீலா மைதானத்தில் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெறும். புது தில்லி யமுனா விளையாட்டரங்கில் அக். 2 முதல் 12 வரை லீக் தொடா் நடைபெறும்.