தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

உலக தடகள சாம்பியன்ஸிப் ஈட்டி எறிதல்: ஒலிம்பியன் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஏமாற்றம்!

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து ஒலிம்பிக் சாம்பியன்கள் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் வெளியேற்றம்...

நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம், ஜூலியன் வெபர். - (படம் | ஏபி)

Published On :

உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் இருந்து ஒலிம்பிக் சாம்பியன்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானில் அர்ஷத் நதீம் இருவரும் இறுதிச்சுற்றுக்கு முந்தையச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப்பின் 20 வது சீசன் நடைபெற்று வருகிறது.

சச்சின் யாதவ்.

சச்சின் யாதவ். - (படம் | ஏபி)

இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் உள்பட உலகின் 198 நாடுகளில் இருந்து மொத்தமாக 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுப் போட்டி நடைபெற்றது.

ஏ பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான இந்தியாவின் நீரஜ் சோப்ராவுடன், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர், ஜாகுப் வாடில் (செக்குடியரசு) மற்றும் கெஷோர்ன் வால்காட் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

பதக்கத்தைத் தவறவிட்ட ஏமாற்றத்தில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.

பதக்கத்தைத் தவறவிட்ட ஏமாற்றத்தில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. - (படம் | ஏபி)

இந்த நிலையில், போட்டியில் ஏமாற்றமளித்த ஒலிம்பியன் நீரஜ் சோப்ராவால் 84.03 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது. இதனால், அவர் 8-வது இடத்தைப் பிடித்தார். 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கத்தை வென்ற அதே மைதானத்தில் தோல்வியடைந்த நீரஜ் சோப்ரா, மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானார்.

அவரைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல்முறையாக 90 மீட்டர்களுக்கு மேல் ஈட்டி எறிந்து தங்கம் வென்ற அர்ஷ்த் நதீம் 10-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அவரால், 82.75 தொலைவுக்கு மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது.

Story image

ஜூலியன் வெப்பர் 86.11 தொலைவுக்கு ஈட்டி எறிந்தும் அவரால் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. அவர் 5 ஆம் இடம்பிடித்தார்.

இந்திய தரப்பில் பங்கேற்ற மற்றொரு வீரரான சச்சின் யாதவ் தொடக்கம் முதலே சிறப்பாக ஈட்டி எறிந்தார். 86.27 தொலைவுக்கு ஈட்டி எறிந்து 4-வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(இடது), தங்கப் பதக்கம் வென்ற டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷோர்ன் வால்காட்(நடுவில்), வெண்கலப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன்(வலது).

வெள்ளிப் பதக்கம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(இடது), தங்கப் பதக்கம் வென்ற டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷோர்ன் வால்காட்(நடுவில்), வெண்கலப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன்(வலது). - (படம் | ஏபி)

இதனால், இறுதிப்போட்டிக்கு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், இந்தியாவில் சச்சின் யாதவும் தேர்வு செய்யப்பட்டார்.

88.16 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷோர்ன் வால்காட தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

அவரைத் தொடர்ந்து கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (87.38 மீ) மற்றும் கர்டிஸ் தாம்சன் (86.67 மீ) தொலைவுக்கு ஈட்டி எறிந்து இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

Summary

Neeraj Chopra ends disappointing 8th, Sachin Yadav takes 4th spot at World Championships

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.