
சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவின் முதல் போட்டியில் 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தனது முதல் கோல் அடித்த மார்கஸ் ராஷ்ஃபோர்டு ஆட்ட நாயகனாக தேர்வானார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் மார்கஸ் ரஷ்ஃபோர்டு (27 வயது) மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து லோன் மூலம் பார்சிலோன அணிக்கு இந்த சீசனில் வாங்கப்பட்டார்.
மிகவும் திறமைசாலி என மதிப்பிடப்பட்ட இவர் சில ஆண்டுகளாக சரியாக விளையாடமால் இருந்தார்.
இந்த சீசனில் பார்சிலோனாவுக்கு வாங்கப்பட்ட ரஷ்ஃபோர்டு லா லீகாவில் 4 போட்டிகளில் விளையாடி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக்கில் நியூகேஸ்டல் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.
போட்டியின் 58-ஆவது நிமிஷத்தில் ஹெட்டரிலும் 67-ஆவது நிமிஷத்தில் தனது வலது காலினாலும் ராக்கெட் போல் கோல் அடித்தார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் டுசெல் அமைதியாக இருந்தார்.
முன்னாள் யுனைடெட் வீரர்கள் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
முதல் நான்கு போட்டிகளில் சரியாக விளையாடமல் இருந்த இவரை அணியில் எடுத்தது தவறா என பேச்சுகள் எழுந்த நிலையில், அதையெல்லாம் சுக்குநூறாக்கும்படி விளையாடியுள்ளார்.
யுனைடெட்டில் ஜீரேவாக இருந்து, பார்சிலோனாவில் ஹீரோவாக மாறியுள்ளார். சாம்பியன்ஸ் லீக்கை வென்று தருவாரா எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.