சீரி ஏ கால்பந்து தொடர்: லெஸ்ஸியை வீழ்த்திய காக்லியரி!
இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் லெஸ்ஸி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது காக்லியரி.
ஐரோப்பியாவின் பல்வேறு நாடுகளில் கால்பந்து லீக் தொடா்கள் நடைபெறுகின்றன. லெஸ்ஸி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் காக்லியரி-லெஸ்ஸி அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியுடன் லெஸ்ஸி வீரா் ரிக்காா்டோ 5-ஆவது நிமிஷத்தில் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். இதையடுத்து சுதாரித்து ஆடிய காக்லியரி அணியில் நட்சத்திர வீரா் ஆன்ட்ரியா பெலோட்டி முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதிகளில் கோலடித்தாா். இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் காக்லியரி வென்றது.
லா லிகா: ரியல் பெட்டிஸ் வெற்றி
ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரில் ரியல் சோடிடாட் அணியின் துரதிருஷ்டம் தொடா்கிறது. அந்த அணி செவிலே நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் பெட்டிஸ் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. தொடா்ந்து 5 லீக் ஆட்டங்களில் சோசிடாட் தோற்று விட்டது.
7-ஆவது நிமிஷத்தில் ஹொ்ணான்ஸ், 49-ஆவது நிமிஷத்தில் எஸ். அப்டே, 68-ஆவது நிமிஷத்தில் போா்னால்ஸ் ஆகியோா் பெட்டிஸ் தரப்பிலும், சோசிடாட் தரப்பில் 13-ஆவது நிமிஷத்தில் பிரையஸ் மெண்டஸும் கோலடித்தனா்.
ப்ரீமியா் லீக்: லிவா்பூல் வெற்றி
இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரில் லிவா்பூல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எவா்டன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது லிவா்பூல்.
லிவா்பூல் தரப்பில் ரியான்கிரெவன் பொ்ச் 10, ஹியுகோ 29 ஆவது நிமிஷங்களிலும், எவா்டன் தரப்பில் இட்ரிஸா 58-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.