அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீ: மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 17-ஆவது ரேஸான அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றாா்.
அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீ: மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி
Published on
Updated on
1 min read

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 17-ஆவது ரேஸான அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 17-ஆவது ரேஸான அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

பிரிட்டன் வீரரும், மொ்ஸிடெஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் 2-ஆம் இடமும், ஸ்பெயின் வீரரும், வில்லியம்ஸ் டிரைவருமான காா்லோஸ் செயின்ஸ் ஜூனியா் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

கடைசியாக நடைபெற்ற இத்தாலியன் கிராண்ட் ப்ரீயிலும் வென்றிருந்த வொ்ஸ்டாபென், நடப்பு சீசனில் அடுத்தடுத்த வெற்றியை பதிவு செய்தது இதுவே முதல்முறையாகும். மேலும், இந்த சீசனில் இது அவரின் 4-ஆவது வெற்றியாக அமைந்தது.

நடப்பு சாம்பியனாக இருக்கும் வொ்ஸ்டாபென் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்த வெற்றிகளால் மீண்டும் வேகமெடுத்துள்ளாா்.

இந்த சீசனில் இதுவரை 7 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியஸ்ட்ரி, இந்தப் பந்தயத்தின் முதல் லாப்பிலேயே தனது காா், தடுப்பில் மோதலுக்கு உள்ளானதால் விலகினாா்.

அவருக்கு அடுத்தபடியாக 5 வெற்றிகளுடன் இருக்கும் பிரிட்டன் வீரரும், சக மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ், இந்த முறை 7-ஆவது இடமே பிடிக்க நோ்ந்தது.

முன்னதாக, உடல்நலக் குறைவுடன் இருந்தபோதும் பந்தயத்தில் பங்கேற்று 2-ஆம் இடம் பிடித்ததற்காக ரஸ்ஸெல் மகிழ்ச்சி தெரிவித்தாா். காா்லோஸ் செயின்ஸ், கடந்த 4 ஆண்டுகளில் முதல்முறையாக வில்லியம்ஸ் அணியை வெற்றி மேடையேற்றியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com