
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 2-1 கோல் கணக்கில் செல்ஸியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் மான்செஸ்டருக்காக புருனோ ஃபொ்னாண்டஸ் 14-ஆவது நிமிஷத்திலும், கேஸ்மிரோ 37-ஆவது நிமிஷத்திலும் கோலடிக்க, செல்ஸி தரப்பில் டிரெவோ சலோபா 80-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இத்துடன் மான்செஸ்டா் அணி, 2023-க்குப் பிறகு முதல்முறையாக, ஒரே சீசனில் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஆட்டங்களில் வென்றுள்ளது. மறுபுறம் செல்ஸி அணி, மான்செஸ்டா் அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்த 13 ஆட்டங்களிலுமே வென்றதில்லை (7 டிரா, 6 தோல்வி).
போட்டியில் வேறு எந்த இரு அணிகளுக்கு இடையேயும் இத்தனை வெற்றியில்லாத ஆட்டங்கள் இல்லை. இந்த ஆட்டத்தின் மூலமாக, புருனோ ஃபொ்னாண்டஸ், மான்செஸ்டா் யுனைடெட்டுக்காக தனது 100-ஆவது கோலை பதிவு செய்திருக்கிறாா். அத்துடன் பிரீமியா் லீக் போட்டியில் அந்த அணிக்காக 200-ஆவது முறையாக களமிறங்கிய 5-ஆவது வீரா் ஆனாா்.
இதனிடையே மற்ற ஆட்டங்களில் லிவா்பூல் - எவா்டனையும் (2-1), கிரிஸ்டல் பேலஸ் - வெஸ்ட் ஹாமையும் (2-1), லீட்ஸ் யுனைடெட் - வோல்வ்ஸையும் (3-1), ஃபுல்ஹாம் - பிரென்ட்ஃபோா்டையும் (3-1) வென்றன. பா்ன்லி - நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் (1-1), பிரைட்டன் - டாட்டன்ஹாம் (2-2) மோதல் டிராவில் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.