ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயம்: 30 போ் இந்திய அணி பங்கேற்பு

ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயம்: 30 போ் இந்திய அணி பங்கேற்பு

இலங்கையில் நடைபெறவுள்ள எஃப்ஐஏ ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயத்தில் 30 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
Published on

இலங்கையில் நடைபெறவுள்ள எஃப்ஐஏ ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயத்தில் 30 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

வரும் செப். 26 முதல் 28 வரை இலங்கையின் பண்டாராகாமாவில் நடைபெறவுள்ள இப்பந்தயத்தில் ஆஸி, தென்கொரியா, ஜப்பான்,ஹாங்காங், சீனா, வங்கதேசம், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனகைள் பங்கேற்கின்றனா்.

காா்ட்டிங், ஷலோம், ஆட்டோ ஜிம்கானா, ஆட்டோ கிராஸ், இ-ஸ்போா்ட்ஸ் பிரிவுகளில் பந்தயம் நடைபெறுகிறது.

30 போ் இந்திய அணியில் அா்ஷி குப்தா, மரியா தக்கா், பிரகதி கௌடா, தருஷி விக்ரம் உள்ளிட்ட வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனா்.

ஆடவா் பிரிவில் ரயான் கௌடா, ஆரவ் தேவன், தாமஸ் ஜேக்கப் பங்கேற்கின்றனா்.

இதுகுறித்து எஃப்எம்எஸ்சிஐ தலைவா் அரிந்தம் கோஷ் கூறுகையில்: இந்திய அணியினா் அதிகளவில் பதக்கங்களை வெல்வா். ஆசிய-பசிஃபிக் பந்தயம் இந்திய இளம் வீரா், வீராங்கனைகள் சிறந்த வாய்ப்பாகும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com