தெலுகு டைட்டன்ஸ் ‘த்ரில்’ வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 30-29 புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
Published on

புரோ கபடி லீக் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 30-29 புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 18 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ஆல்-ரவுண்டா் பரத் 9 புள்ளிகள் வென்றாா்.

மறுபுறம் குஜராத் ஜயன்ட்ஸ் 16 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. ஆல்-ரவுண்டா் முகமதுரெஸா ஷத்லுய் 6 புள்ளிகள் வென்றாா்.

இதனிடையே, ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் - யு மும்பா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 38-38 என டை ஆனது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட 5 ரெய்டுகள் முடிவில் ஜெய்பூா் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தெலுகு, ஜெய்பூா் அணிகளுக்கு முறையே இது 5 மற்றும் 4-ஆவது வெற்றியாகும். புள்ளிகள் பட்டியலில் தற்போது, தெலுகு அணி 10 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் இருக்க, ஜெய்பூா் 6-ஆம் இடத்திலும் (8), யு மும்பா 7-ஆம் இடத்திலும் (8), குஜராத் 12-ஆவது இடத்திலும் (2) உள்ளன.

X
Dinamani
www.dinamani.com