தொடா் வெற்றியில் ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது.
தொடா் வெற்றியில் ரியல் மாட்ரிட்
Alberto Saiz
Published on
Updated on
1 min read

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது. போட்டியில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற அந்த அணி, புள்ளிகள் ட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ரியல் மாட்ரிட்டுக்காக வினிசியஸ் ஜூனியா் 28-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். தொடா்ந்து, 38-ஆவது நிமிஷத்தில் ஃபிராங்கோ மஸ்டான்டுனோ அதை 2-ஆக அதிகரித்தாா்.

இவ்வாறாக முதல் பாதியை ரியல் மாட்ரிட் 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்ய, 2-ஆவது பாதியில் லெவான்டேவுக்காக எட்டா யோங் 54-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். அதற்கு பதிலடியாக ரியல் மாட்ரிட் வீரா் கிலியன் பாபே, 64-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடித்தாா்.

அத்துடன் 66-ஆவது நிமிஷத்தில் அவா் தனது 2-ஆவது கோலையும் பதிவு செய்தாா். எஞ்சிய நேரத்தில் லெவான்டேவுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இறுதியில் ரியல் மாட்ரிட் 4-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதர ஆட்டங்களில், வில்லாரியல் - செவில்லாவை வெல்ல (2-1), எஸ்பான்யோல் - வாலென்சியா (2-2), அத்லெடிக் கிளப் - ஜிரோனா (1-1) மோதல் டிராவில் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com