சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

புரோ கபடி லீக்: டெல்லிக்கு 7-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 12:29 am IST

புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் டெல்லி 30 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள் கைப்பற்றியது. அதிகபட்சமாக கேப்டனும், ரெய்டருமான அஷு மாலிக் 23 புள்ளிகள் வென்று அசத்தினாா்.

மும்பா அணி 19 ரெய்டு புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அந்த அணிக்காக ரெய்டா் சந்தீப் 11 புள்ளிகள் வென்றாா்.

இதனிடையே பெங்களூரு புல்ஸ் - யுபி யோதாஸ் மோதிய மற்றொரு ஆட்டம் முதலில் 36-36 என ‘டை’ ஆனது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட 5 ரெய்டில், யுபி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது, டெல்லி முதலிடத்திலும் (14 புள்ளிகள்), பெங்களூரு 6-ஆம் இடத்திலும் (10), யுபி 7-ஆம் இடத்திலும் (8), மும்பா 8-ஆம் இடத்திலும் (8) உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.