
எம்.எல்.எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி நியூயார்க் சிட்டி எஃப்சி அணியுடன் மோதிய போட்டியில் 4-0 என வென்றது.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார்.
அமெரிக்காவில் நியூயார் சிட்டி எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் இன்டர் மியாமியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 74, 86-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார். மேலும், போட்டியின் 43-ஆவது நிமிஷத்தில் அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.
இந்த சீசனில் மெஸ்ஸி தொடர்ச்சியாக ஆட்ட நாயகன் விருதுகளை வென்று வருகிறார்.
கடைசியில் பெனால்டியில் 83-ஆவது நிமிஷத்தில் லூயிஸ் சௌரஸ் கோல் அடித்தார். இறுதியில் 4-0 என இன்டர் மியாமி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக இன்டர் மியாமி பிளே ஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக 2022, 2024ஆம் ஆண்டு தேர்வாகியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.