எம்எல்எஸ் தொடரில் வரலாறு படைத்த மெஸ்ஸி: தங்கக் காலணி பட்டியலிலும் முதலிடம்!

எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸி நிகழ்த்திய சாதனை குறித்து...
Inter Miami forward Lionel Messi arrives for an MLS soccer match
லியோனல் மெஸ்ஸி. படம்: ஏபி
Published on
Updated on
1 min read

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

நியூயார்க் சிட்டி எப்ஃசி உடனான இன்றைய போட்டியில் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அசத்தும் மெஸ்ஸி

அமெரிக்காவில் நியூயார் சிட்டி எஃப்சி அதன் சொந்த மண்ணில் இன்டர் மியாமி 4-0 என வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி 74, 86-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார். மேலும், போட்டியின் 43-ஆவது நிமிஷத்தில் அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.

இந்த சீசனில் தொடர்ச்சியாக மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருதுகளை வென்று வருகிறார்.

இந்த சீசனில் மட்டும் மெஸ்ஸி 24 கோல்கள், 13 அசிஸ்ட்டுகளைச் செய்து 37 கோல்களில் பங்காற்றியுள்ளார்.

எம்எஸ்எஸ் தொடரில் புதிய வரலாறு

இதன்மூலம், தொடர்ச்சியாக இரண்டு சீசனில் 35 கோல்களுக்கும் அதிகமாக பங்காற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும், தங்கக் காலணி (கோல்டன் பூட்) பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறார்.

கடந்த சீசனில் 19 போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸி 20 கோல்கள், 16 அசிஸ்ட் செய்து 36 கோல்களில் பங்காற்றியிருந்தார்.

இந்த சீசனில் 23 போட்டிகளில் விளையாடி 37 கோல்களில் பங்காற்றியுள்ளார்.

இந்த வெற்றியுடன் இன்டர் மியாமி எம்எல்எஸ் தொடரில் பிளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

Summary

The man leo messi is also the first to have 35 or more goal contributions in the MLS in consecutive seasons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com