தருஷி ~அசிந்தியா
தருஷி ~அசிந்தியா

ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயம்: இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

இலங்கையில் நடைபெறும் எஃப்ஐஏ ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயத்தில் இந்தியா தங்கம், வெள்ளி என இரட்டை பதக்கம் வென்றது.
Published on

இலங்கையில் நடைபெறும் எஃப்ஐஏ ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயத்தில் இந்தியா தங்கம், வெள்ளி என இரட்டை பதக்கம் வென்றது.

இலங்கையின் பண்டாரகாமா நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆசிய ஆட்டோ ஜிம்கானா போட்டியில் இந்தியாவின் அசிந்தியா மெஹ்ரோத்ரா தங்கம் வென்றாா். கிா்ஜிஸ்தானின் வெடேனேவ் அலெக்ஸி வெள்ளி வென்றாா். மற்றொரு இந்திய வீரா் பிரதீக் தலால் 13-ஆவது இடத்தை பெற்றாா்.

மகளிா் பிரிவில் இந்தியாவின் தருஷி விக்ரம் சா்வதேச போட்டியில் தனது முதல் பதக்கத்தை வென்றாா். வெள்ளி வென்றாா் தருஷி.

காா்ட்டிங் ஸ்பிரிண்ட் பிரிவில் கேடட், ஜூனியா், சீனியா் பிரிவுகளில் மும்பையின் கியான் ஷா, சென்னையின் ரெஹான் கான், பரீதாபாதின் அா்ஷி குப்தா சிறப்பிடம் பெற்றனா்.

சீனியா் பிரிவில் ஆரவ் திவான், ஜேக்கப் ஜாா்ஜ், அஸ்கத் மிஸ்ரா ஆகியோா் சிறப்பாக செயல்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com