வாகை சூடினார் அல்கராஸ்

ஜப்பான் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
வாகை சூடினார் அல்கராஸ்
Published on
Updated on
1 min read

ஜப்பான் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அவர், 6-4, 6-4 என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ûஸ வீழ்த்தினார்.

இருவரும் 5-ஆவது முறையாக சந்தித்த நிலையில், அல்கராஸ் 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். அண்மையில் லேவர் கோப்பை இறுதிச்சுற்றில் ஃப்ரிட்ஸிடம் கண்ட தோல்விக்கு, அல்கராஸ் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் முதல்முறையாகக் களம் கண்ட நிலையிலேயே, அல்கராஸ் அதில் சாம்பியனாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலமாக அல்கராஸ், நடப்பு சீசனில் தனது 8-ஆவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். கிராண்ட்ஸ்லாம், மாஸ்டர்ஸ் ஆகிய போட்டிகளில் வென்ற கோப்பைகளும் அதில் அடக்கம்.

வெற்றிக்குப் பிறகு பேசிய அல்கராஸ், "சந்தேகத்துக்கு இடமின்றி இதுவே எனது சிறந்த சீசனாகும். 8 பட்டங்கள் வென்றிருப்பதுடன், 10 போட்டிகளில் இறுதிச்சுற்று வரை வந்திருக்கிறேன்.

இந்த ஆண்டின் தொடக்கம் நன்றாக அமையாவிட்டாலும், கடின உழைப்பின் மூலமாக இவ்வாறு முன்னேறியிருக்கிறேன்' என்றார்.

அல்கராஸின் டென்னிஸ் கேரியரில் ஒட்டுமொத்தமாக இது அவரின் 24-ஆவது சாம்பியன் பட்டமாகும். 1990-க்குப் பிறகு பிறந்த டென்னிஸ் வீரர்களில் அதிக சாம்பியன் பட்டங்கள் வென்றவராக இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் ஸ்வெரெவின் சாதனையை, தற்போது அல்கராஸýம் சமன் செய்திருக்கிறார்.

போபண்ணா தோல்வி: இப்போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஜப்பானின் டகேரு யுஸுகி கூட்டணி 5-7, 5-7 என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் எட்ரவர்டு ரோஜர்/போலந்தின் ஹியுகோ நைஸ் இணையிடம் தோல்வி கண்டது.

இறுதியில் சின்னர் - டியென் மோதல்

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னர் - அமெரிக்காவின் லாரென் டியென் மோதுகின்றனர்.

முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சின்னர் 6-3, 4-6, 6-2 என்ற செட்களில், 3-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினார். 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவை எதிர்கொண்ட டியென், 5-7, 7-5, 4-0 என்ற நிலையில் இருந்தபோது, மெத்வதெவ் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

காலிறுதியில் கெளஃப், அனிசிமோவா

சீனா ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கெளஃப் 4-6, 7-6 (7/4), 6-2 என்ற செட்களில், 15-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வீழ்த்தினார். 3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 1-6, 6-2, 6-4 என்ற வகையில், 13-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவாவை சாய்த்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com