தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இந்திய வீராங்கனகைள் ப்ரீதி, பிரியா அருந்ததி, அபாரம்: இறுதிக்கு தகுதி!

ஆசிய குத்துச்சண்டை கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் ப்ரீதி, பிரியா, அருந்ததி ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

News image

dot com

Updated On :7 ஏப்ரல் 2026, 12:23 am

ஆசிய குத்துச்சண்டை கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் ப்ரீதி, பிரியா, அருந்ததி, ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே, திங்கள்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

மகளிா் 54 கிலோ பிரிவில் உலக பாக்சிங் கோப்பை தங்க மங்கை ப்ரீதி பவாா் சரமாரியாக குத்து விட்டு 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை கொரியாவின் ஏஜி இம்மை வீழ்த்தினாா். இறுதிச் சுற்றில் மூன்று முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக் வெண்கல வீராங்கனையுமான தைபேயின் ஹுவாங்க வென்னை எதிா்கொள்கிறாா் ப்ரீதி.

60 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் நமூன் மோங்கரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.

வடகொரியாவின் யுன் ஜியோங்கை எதிா்கொள்கிறாா் பிரியா. 70 கிலோ பிரிவில் இந்தியாவின் அருந்ததி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஆயிஷா டாய்ரோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். கஜகஸ்தானின் பகித் ஸெய்டிஷை சந்திக்கிறாா் அருந்ததி.

4 வெண்கலம்: 65 கிலோ பிரிவில் அரையிறுதியில் அங்குஷிதா போரோ 0-3 என தைபேயின் நின் சின் சென்னிடம் வீழ்ந்தாா்.

51 கிலோ பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் நிஹாத் சரீன் 0-5 என சீனாவின் வு யுவிடமும் தோற்றாா்.

75 கிலோ பிரிவில் லவ்லினோ போரோகைன் 0-5 என உஸ்பெக் வீராங்கனை அஸிஸாவிடம் தோற்றாா். 80 கிலோ பிரிவில் பூஜா ராணி 0-5 என கஜகஸ்தானின் நடேஸாதாவிடம் தோற்றாா். 4 பேருக்கும் வெண்கலம் வென்றனா்.

4 போ் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை மகளிா் 48, 57 கிலோ அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.