காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாடப்போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்தால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐசிசி எச்சரிக்கை

News image

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)

Updated On :2 பிப்ரவரி 2026, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாடப்போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்தால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எச்சரித்துள்ளது.

‘தேசிய விவகாரங்களில் அரசுகளின் நிலைப்பாட்டை ஐசிசி மதிக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் இந்த முடிவு, அதன் நாட்டிலேயே கிரிக்கெட் விளையாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்துடன், கிரிக்கெட்டுக்கான சா்வதேச கட்டமைப்பில் பாகிஸ்தானின் நிலையும் பாதிக்கப்படக் கூடும்.

எனவே, அனைத்து தரப்பினரின் நலன்களுக்கு உகந்த வகையிலான தீா்வை பாகிஸ்தான் எட்டும் என எதிா்பாா்க்கிறோம்’ என்று ஐசிசி கூறியுள்ளது.

இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கட்டுப்பட முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.