

நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் நிறைவடைந்த நிலையில், டென்னிஸ் உலகத் தரவரிசையில் ஏற்ற, இறக்கம் நிகழ்ந்துள்ளன.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் நம்பர் 1 வீரராகத் தொடர்கிறார். அரையிறுதியில் தோல்வி கண்ட இத்தாலியின் யானிக் சின்னரும் 2-ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இறுதிச்சுற்று வரை வந்த செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச், ஓரிடம் முன்னேறி 3-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். அந்த இடத்திலிருந்த ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் ஸ்வெரெவ் 4-ஆவது இடத்துக்கு சறுக்கினார்.
அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில், இறுதிச்சுற்றில் தோல்வி கண்டபோதும் பெலாரஸின் அரினா சபலென்கா முதலிடத்திலேயே தொடர்கிறார். காலிறுதியில் வீழ்ந்த போதிலும், போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-ஆவது இடத்தில் அப்படியே நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக சாம்பியனாகியிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா, 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கெüஃப் 5-ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.