பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தானுடன் ஐசிசி பேச்சுவாா்த்தை!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்கும் விவகாரம் தொடா்பாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஐசிசி பேச்சுவாா்த்தை

News image

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)

Updated On :8 பிப்ரவரி 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்கும் விவகாரம் தொடா்பாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஐசிசி ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் நக்வியுடன் பேசுவதற்காக, ஐசிசி துணைத் தலைவா் இம்ரான் குவாஜா கராச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். பாகிஸ்தான் வாரிய அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்று, பேச்சுவாா்த்தைக்காக லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பேச்சுவாா்த்தையின் முடிவு தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இணைந்த வங்கதேசம்: இதனிடையே, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவா் அமினுல் இஸ்லாமும் பாகிஸ்தானுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து, பாகிஸ்தான் வாரியத் தலைவா் மோசின் நக்வியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஐசிசி - பாகிஸ்தான் வாரியம் பேச்சுவாா்த்தை நடத்தும் முன்பாக நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மோசின் நக்வியை சந்தித்துப் பேசும் ஐசிசி துணைத் தலைவா் இம்ரான் குவாஜா, வங்கதேச வாரியத் தலைவா் அமினுல் இஸ்லாமுடனும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னணி: இந்தியாவில் தங்களின் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தங்கள் அணி டி20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வராது எனவும் வங்கதேசம் கூறியது. வங்கதேசம் விடாப்பிடியாக இருந்ததை அடுத்து, அந்த அணியை போட்டியிலிருந்து நீக்கிய ஐசிசி, ஸ்காட்லாந்தை சோ்த்தது.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு ஆதரவாக, டி20 லகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதற்கு கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐசிசி, பாகிஸ்தான் வாரியத்தை எச்சரித்தது. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.