மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்: ஆகிருதி, அஞ்சுமுக்கு பதக்கம்!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆகிருதி தாஹியா, அஞ்சும் முட்கில் ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

News image
- Adimazes Pvt Ltd
Updated On :10 பிப்ரவரி 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆகிருதி தாஹியா, அஞ்சும் முட்கில் ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

போட்டியின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் மகளிா் தனிநபா் இறுதிச்சுற்றில், கஜகஸ்தானின் சோஃபியா ஷுல்ஸென்கோ 358.2 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றாா்.

இந்தியாவின் ஆகிருதி 354.2 புள்ளிகளுடன் வெள்ளியும், அஞ்சும் 340.4 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ஆஷி சோக்ஸி 330.9 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தாா்.

இதிலேயே அணிகள் பிரிவில் ஆகிருதி, அஞ்சும், ஆஷி அடங்கிய இந்திய அணி 1,756 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றது. கஜகஸ்தானுக்கு தங்கமும் (1,760), ஜப்பானுக்கு வெண்கலமும் (1,730) கிடைத்தன.

50 மீட்டா் ஏா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஜூனியா் மகளிா் பிரிவில், இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட் 353.3 புள்ளிகளுடன் தங்கமும், அனுஷ்கா தாக்குா் 341.1 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

கஜகஸ்தானின் டோமிரிஸ் அமனோவாவுக்கு வெள்ளி (351.4) கிடைத்தது. மற்றொரு இந்தியரான மெல்வினா ஏஞ்ஜெலின் 317.9 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தாா்.

அதிலேயே அணிகள் பிரிவில் பிராச்சி, அனுஷ்கா, ஹேஸல் கூட்டணி 1,748 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. கஜகஸ்தான் வெள்ளி (1,741) பெற்றது.

போட்டியில் இதுவரை இந்தியா, 36 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம் என, 65 பதக்கங்கள் வென்று முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.