உலக சாதனையை நீட்டித்த பிரமோத் பகத்..! 6ஆவது முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம்!

இந்திய பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றது குறித்து...
Pramod Bhagat shines with triple gold and at Abia Para Badminton International
இந்திய பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத்.கோப்புப் படம்
Updated on
1 min read

பஹ்ரைனில் நடைபெற்று வந்த பிடபிள்யூஎஃப் பாரா உலக சாம்பியன்ஷிப்பில் ஆறாவது முறையாக தங்கம் வென்று இந்தியாவின் பிரமோத் பகத் தனது உலக சாதனையை நீட்டித்துள்ளார்.

இதற்கு முன்பாக, இவர் டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்க மகன்

பிகாரைச் சேர்ந்த பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் (37 வயது) பஹ்ரைனில் நடந்த பிடபிள்யூஎஃப் பாரா உலக சாம்பியன்ஷிப் எஸ்எல்3 இறுதிப் போட்டியில் இந்தோனேசிய வீரர் முகமது அலி இம்ரான் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் பிரமோத் பகத் 21-12, 21-18 என்ற கேம்களில் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப்பில் 6-ஆவது தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு (தொடர்ச்சியாக 4 முறை), மொத்தமாக இது 8-ஆவது தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒற்றையர் பிரிவில் 6 தங்கம், இரட்டையர் பிரிவில் 2 தங்கம் என மொத்தமாக 8 வென்று வரலாறு படைத்துள்ளார்.

18 மாதங்கள் தடை

இந்திய பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத், ஊக்கமருந்து பரிசோதனையில் பங்கேற்காததாகக் கூறி, விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம் அவருக்கு 18 மாதங்கள் தடை விதித்தது.

அதன்படி பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரை பிரமோத் பகத் மீதான தடை நீடித்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்த இந்தப் பிரச்னைக்குப் பிறகு அவர் மீண்டு வந்து தங்கம் வென்றுள்ளது மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது.

கடந்த ஜனவரியில் தடைக்குப் பிறகு பங்கேற்ற பிரமோத் பகத், எகிப்து பாரா பாட்மின்டனில் இரட்டைத் தங்கம் வென்றிருந்தார்.

உலக சாம்பியன்ஷிப்பில் பிரமோத் பகத் வென்ற தங்கப் பதக்கங்கள் விவரம்

2009 - தங்கம் (தென் கொரியா)

2015 - தங்கம் (இங்கிலாந்து)

2019 - தங்கம் (ஸ்விட்சர்லாந்து)

2022 - தங்கம் (ஜப்பான்)

2024 - தங்கம் (தாய்லாந்து)

2026 - தங்கம் (பஹ்ரைன்)

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தார். 2019, 2013 உலக சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com