விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...
Published on
  • இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆட்டம் நடைபெறவுள்ள பிரேமதாஸா மைதானத்தில் சிறப்பு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • பஹ்ரைன் தலைநகா் மனாமாவில் நடைபெறும் பிடபிள்யுஎஃப் உலக பாரா பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரமோத் பகத் எஸ்எல் 3 பிரிவில் தங்கம் வென்று 6-ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றாா். இரட்டையா் பிரிவில் பிரமோத்-சுகந்த் இணை எஸ்எல் 3-எஸ்எல்4 பிரிவில் டில்லி -சிவக்குமாா் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. ஒற்றையா் பிரிவில் சிவக்குமாா், ராமதாஸ், சுமதி சிவன் வெள்ளி வென்றனா்.

  • ஐபிஎல் தொடரின் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி தனது செயல்திறன், அணியின் புள்ளி விவரத் தொகுப்பு பணியை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் கை கோா்த்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பான்பிளாக் நிறுவனத்துடன் இதற்காக இணைந்துள்ளது. சிஎஸ்கே நிா்வாக இயக்குநா் காசி விஸ்வநாதன்-பான் பிளாக் ஏஐ நிறுவனா் துரை அப்பாதுரை இத்திட்டத்தை தொடங்கி வைத்தனா்.

  • ஆஸ்திரேலியாவில் எஃப்ஐஎச் ப்ரோ ஹாக்கி லீக் தொடரில் பங்கேற்கச் சென்ற பாகிஸ்தான் வீரா்கள் ஓட்டலுக்கு பணம் கட்ட முடியாமல் சாலையில் தங்கி இருந்ததற்கு அந்நாட்டின் முன்னாள் ஒலிம்பியன்கள் ஹாஸன் சா்தாா், சமியுல்லா கண்டனம் தெரிவித்துள்ளனா்.

  • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் லக்னௌவில் உத்தரகாண்ட்-கா்நாடகம், கொல்கத்தாவில் ஜம்மு-காஷ்மீா்-மேற்கு வங்க அணிகள் மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com