அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏடிபி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ்: ஃப்ரெடெரிகோ சாம்பியன்!

சென்னையில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போா்ச்சுகல் வீரா் ஃப்ரெடெரிகோ ஃபெரெய்ரா சில்வா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போா்ச்சுகல் வீரா் ஃப்ரெடெரிகோ ஃபெரெய்ரா சில்வா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஃப்ரெடெரிகோ 6-4, 6-7 (8/10), 6-4 என்ற செட்களில், 2-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனா வீரா் ஃபெடெரிகோ அகஸ்டின் கோம்ஸை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணிநேரம், 58 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இதன் மூலமாக ஃப்ரெடெரிகோ, ஒற்றையா் பிரிவில் தனது முதல் ஏடிபி சேலஞ்சா் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். அவருக்கு 50 தரவரிசை புள்ளிகளும், ரொக்கப் பரிசாக ரூ.8.64 லட்சமும் கிடைத்தன. 2-ஆம் இடம் பிடித்த அகஸ்டினுக்கு 25 தரவரிசை புள்ளிகளும், ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.