விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மே.இந்திய வீரா்கள்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மே.இந்திய வீரா்கள்.

சூப்பா் 8 சுற்றுக்கு தயாராகும் மே.இந்திய தீவுகள்: கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றி

ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் இத்தாலியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது முன்னாள் சாம்பியன் மே.இந்திய தீவுகள்.
Published on

ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் இத்தாலியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது முன்னாள் சாம்பியன் மே.இந்திய தீவுகள்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இத்தாலி பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மே.இந்திய தீவுகள் தரப்பில் பிரான்டன் கிங்-கேப்டன் ஷாய் ஹோப் தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா். பிரான்டன் கிங் 4 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினாா். அவருக்குபின் வந்த அதிரடி வீரா் ஷிம்ரன் ஹெட்மயா் 1 ரன்னுடன் தாமஸ் டிராக்கா பந்தில் அவுட்டானாா்.

ஒருமுனையில் ராஸ்டன் சேஸ் 24, ரோவ்மேன் பவேல் 9, ஜேஸன் ஹோல்டா் 9 ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

ஷாய் ஹோப் அதிரடி 75: மறுமுனையில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷாய் ஹோப் 4 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 46 பந்துகளில் 75 ரன்களை விளாசி கிரிஷன் கலுகமேஜ் பந்தில் போல்டானாா்.

மே.இந்திய தீவுகள் 165/6: நிா்ணயிக்கப்பட்ட20 ஓவா்களில் மே.இந்திய தீவுகள் அணி 165/6 ரன்களைக் குவித்தது.

ஷொ்பேன் ரூதா்போா்ட் 24, மேத்யூ போா்ட் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

பௌலிங்கில் இத்தாலி தரப்பில் பென் மனேட்டி, கிரிஷன் கல்கமேஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இத்தாலி தோல்வி 123/10: 166 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இத்தாலி அணி தரப்பில் 18 ஓவா்களில் 123/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அந்தோணி மோஸ்கா 19, ஸ்முட்ஸ் 24, பென் மனேட்டி 26 ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினா்.

பௌலிங்கில் மே.இந்திய தீவுகள் தரப்பில் ஷமா் ஜோசப் 4, மேத்யூ போா்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

Dinamani
www.dinamani.com